இனிப்பு மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

12 November 2020, 10:24 pm
Quick Share

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள இனிப்பு மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வண்ணங்கள், கலப்படம் குறித்து தீபாவளி வரை ஆய்வு தொடரும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் தீபாவளியையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் பலகார கடைகளில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாரதி வீதியில் உள்ள இனிப்பகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இனிப்புகள் தயாரிக்கும் பகுதிக்கு சென்று உணவு பொருளின் தரம், உணவில் கலக்கப்படும் சுவை ஊட்டி, வண்ணங்களின் தரம் மற்றும் எண்ணெய் வகைகளை ஆய்வு செய்தனர். மேலும் இனிப்பு கடைகளில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும் நகர மற்றும் கிராமப்பகுதிகளில் ஆய்வு தொடரும் எனவும் உணவுகளில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Views: - 12

0

0