தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்

26 January 2021, 2:58 pm
Quick Share

திருச்சி: திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.அதன் பின் நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய 110 காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 409 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவமனைகள், இ.சேவை மையங்கள் என 14 பேருக்கு தங்க மெடல், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை வீடுகளுக்கே சென்று கௌரவித்து நலத்திட்டங்கள் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடியரசு தின விழாவை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Views: - 3

0

0