வேலூர்: வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் காட்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்து, மழைக்காலம் என்பதால் மக்கள் அவதி அடைவதால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்மாவட்டம்,காட்பாடி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டபணிகள் தற்போது நடந்து வருகிறது இந்த பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் மிகவும் பாதிகபடுகின்றனர் என மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தது இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உடன் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சில்க் மில் பஸ்நிறுத்தம் முதல் அனைத்து தெருக்களையும் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதாள சாக்கடை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் சாலைகள் மக்கள் மழைக்காலம் என்பதால் சாலைகள் செல்ல முடியாமல் பாதிக்கபடுவதாக தெரிவித்தனர். தற்போது பருவ மழை துவங்கியுள்ள காரணத்தால் இப்பணிகள் பகல் இரவு என இருவேளைகளிலும் கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். இதனால் ஓரிரு மாதங்களில் விரைவாக பணிகள் முடிக்கபடும் என ஆட்சியர் கூறினார்.
0
0