சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்…

Author: kavin kumar
20 January 2022, 3:48 pm
Quick Share

புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலுள்ள சாலைகள் பழுதடைந்தது. இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட , முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகர் ஆகிய பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்ககோரியும், உடைந்து உள்ள வாய்கால்களை சரி செய்து தரக்கோரி 30 க்கு மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அரவிந்தர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 264

0

0