முதல்வரை வரவேற்பது குறித்து மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

18 November 2020, 6:57 pm
Quick Share

அரியலூர்: தமிழக முதல்வரை வரவேற்பது குறித்து மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் வருகிற 26 ஆம் தேதி கொரோனா ஆய்வு கூட்டத்திற்கு வருகைதரும் தமிழக முதல்வரை வரவேற்பது குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கபட்டது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கவது மற்றும் திருத்து செய்யும் பணி குறித்தும் வாக்குசாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கபட்டது. பின்னர் அரியலூர், திருமானூர் ஒன்றிய, அரியலூர் நகர பொருப்பாளர்களுக்கு வாக்காளர் படிவங்ஙள் வழங்கபட்டது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராம. ஜெயலிங்கம் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.