கோவையில் நான்கு இடங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி

15 January 2021, 4:38 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு இடங்களை மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடத்தப்பட்டது.தடுப்பூசி வந்த பிறகு அதை பொது மக்களுக்கு எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. அதன்படி பூனேவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டன.

கோவையை பொறுத்தவரை 10 இடங்களில் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் நான்கு இடங்களில் மட்டுமே தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில், கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் வீதம் 56 ஆயிரம் முன் களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட உள்ளது.

பிரதமர் நாளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அதன்பிறகு நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Views: - 10

0

0