தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் குவியும் பொது மக்கள் கூட்டம்

Author: kavin kumar
31 October 2021, 7:56 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 

பனியன் நகரான திருப்பூரில், உள்ளூர் மாவட்டத்தினர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர், குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  திருப்பூரில் முக்கிய பகுதிகளான குமரன் ரோடு, புது  மார்க்கெட் வீதி ,காதர்பேட்டை போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூரில் அதிகம் வெளிமாவட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. 

Views: - 477

0

0