மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுப்பு: சாலையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பொதுமக்கள்…

Author: Udhayakumar Raman
1 August 2021, 2:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுதால் சாலையில் நின்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள், இதன் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிரகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்படுத்தியது. எனவே பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

மற்றும் இளையனார் வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்பட அனைத்து முருகன் திருக்கோயில்களிலும், மேலும் பக்தகர்கள் அதிகமாக கூடும் என எதிர்பார்க்கப்படும் கீழ்கண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்த முருகன் கோவில்களிலும், காஞ்சிபுரம், அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், அருள்மிகு ஏகாம்பரநார் திருக்கோயில், அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் போன்ற மக்கள் அகிகம் கூடும் திருக்கோயில்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகை முன்னிட்டு 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்வதற்று அனுமதி கிடையாது

எனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது இதனால் இன்று காலை முதல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் கோவிலின் வாசல் முன்பு சாலையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். ஒவ்வொரு கோவில் வாசலிலும் தாராளமாக 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

Views: - 71

0

0