முழு ஊரடங்கை ஒட்டி வெறிச்சோடிய சாலை; தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!!

Author: kavin kumar
9 January 2022, 2:08 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அதிதீவிரமாக பரவத்தொடங்கியதையடுத்து தமிழக அரசின் சார்பில், இரவு நேர ஊரடங்கும் அதே போன்று ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில், ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் வாகனங்களின்றி வெறிச்சோடியது.

முழு ஊரடங்கை ஒட்டி, திருக்கோவிலூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நகர் பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளையும் போலீசார் பேரிகார்டு கொண்டு முடக்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக நகர் பகுதிக்கு வரும் நபர்களை உரிய விசாரணைக்கு பின்னர் அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று அத்தியாவசிய தேவைகளான, பாலகம், மருந்தகம் மருத்துவமனை உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்குகிறது.

Views: - 98

0

0