மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: சாலையில் படுத்து கண்டன போராட்டம்

Author: Udhayakumar Raman
26 June 2021, 3:33 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற விவசாயகள் தடுத்து நிறுத்த சாலையில் படுத்து கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டெல்லியில் விவசாயிகள் கடந்த ஏழு மாத காலம் சுமார் 210 நாட்கள் வேளாண்மை சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடம் இதுவரை பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்த பின்பும் மத்திய அரசானது தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்காமல் வேளாண் சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. எனவே டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கவர்னர் நேரில் சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது.

தற்போது கொரோனா பெரும் தோற்று இருப்பதால் சென்னைக்கு சென்று மனு அளிப்பது சாத்தியமற்ற செயல் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலையிலேயே படுத்து தங்களுடைய கண்டன கோஷங்களை எழுப்பி உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு தங்களை டெல்லியில் சென்று போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசானது உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் நாங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 183

0

0