தருமபுரியில் சட்டமன்ற பொது தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

1 March 2021, 5:53 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமையில் சட்டமன்ற பொது தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் பொது தேர்தல் குறித்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகள் குறித்தும், பொது இடங்களில் கட்சி சின்னங்கள் வரைவது குறித்தும், பொது கூட்டம் நடைபெறும் இடங்கள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும்,

புகார்கள் ஏதேனும் தெரிவிக்க வேண்டும் என்றால் புகார் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மேலும் தேர்தல் நடைபெறும் வரை பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்தழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கட்சினரிடம் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Views: - 1

0

0