ஊழியருக்கு கொரோனா: தலைமை அஞ்சல் அலுவலகம் மூடல்

26 August 2020, 4:52 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால் தலைமை அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 29 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அதில் தருமபுரி தலைமை அஞசல் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரியும் ஒருவருக்கு கடந்த இருதினங்களாக சளி, காய்சல் இருந்த நிலையில் நேற்று அவரை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதனையடுத்து அவர் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட அவர் தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் தபால்காரராக பணிபுரிந்து வந்ததால் மக்கள் அதிகமாக நடமாடும் முக்கிய பகுதியல் தலைமை தபால் நிலையம் செயல்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தபால் நிலையம் மூடப்பட்டது. மேலும் அந்த தபால் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யபட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கபட்ட நிலையில் தற்போது 230 பேர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றால் பாதிக்கபட்டு 11 பேர் இறந்துள்ளனர்.

Views: - 28

0

0