தருமபுரியில் ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

19 April 2021, 6:11 pm
Quick Share

தருமபுரி: தங்கள் தொழில் சார்ந்த விழாக்களை 50 சதவீதம் கொள்ளளவுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் வேலை மற்றும் தொழில் நடத்த முடியாமல் வருவாய் இழந்து மிகவும் பாதிக்கபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஒளி, ஒலி மற்றும் பந்தல் மேடை சப்ளையர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் வரும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. ஆதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் தங்களுக்கு திருமண மண்டபங்கள், கோவில் விழாக்கள் நடத்த 50 சதவீத கொள்ளளவுடன் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெக்கரேஷன் பொருட்களுடன் வாகன பேரணி சென்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தருமபுரி மாவட்ட ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு அளித்தனர்.

Views: - 20

0

0