பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்

Author: Udhayakumar Raman
24 March 2021, 5:32 pm
Quick Share

தருமபுரி: இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை மாவட்ட தலைவர் நஞ்சப்பன் திறந்து வைத்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் தனித்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சதீஸ்குமார் என்பவர் புருசு சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்று அவர் போட்டியிடும் தொகுதியான அரூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாவட்ட தலைவர் நஞ்சப்பன் திறந்து வைத்தார். இதில் இந்திய ஜனாயக கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.

இதற்கு பிறகு அரூர்-சேலம் சாலையில் மாவட்ட தலைவர் நஞ்சப்பன் தலைமையில், இந்தியஜனநாயக கட்சியின் வேட்பாளர் சதீஸ்குமார்க்கு புருசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கடை கடையாக கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். இதில் ஏராளமான ஐஜேகே கட்சியை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

Views: - 70

0

0