கே. ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீர் திறப்பு

13 November 2020, 9:27 pm
Quick Share

தருமபுரி: கே. ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்க்காக தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தண்ணீர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டியிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முன் தினம் ஈச்சம்பாடி அணைக்கட்டியிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்திரவிட்டார். அதன் அடிப்படையில், இன்று கே.ஈச்சம்பாடி அணைக்கட்டியிலிருந்து தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் கே.பி,அன்பழகன் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

அப்போது அவர் விவசாயிகளிடம் பேசும் போது. கே.ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து வைக்கபட்டது. இதனால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுப்பட்டி, எலவடை, பாளையம், சாமாண்டஅள்ளி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட 32 கிராமங்கள் பாசன வசதி பெறும். மேலும், நெல், கரும்பு, ராகி, சோளம், நிலக்கடலை, தென்னை ஆகிய வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெற உள்ளனர்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் வேளாண்மைத்துறை சார்பில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு இலாபம் என்ற சீறிய இலட்சியத்தை இலக்காக கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளும் வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று அதிக மகசூல் பெறவேண்டும் என அமைச்சர் கே.பி.அன்பழகன், தெரிவித்தார்.

Views: - 15

0

0