ஆர்ப்பாட்டத்தின் போது மனநோயாளியின் மண்டையை உடைத்து பாமகவினர் அட்டுழியம்

29 January 2021, 9:47 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கிடு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வந்த மனநோயாளியின் மண்டையை உடைத்து பாமகவினர் அட்டுழியம் செய்தனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கிடு வழங்கிடக்கோரி அக்கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் வெங்கடேசஸ்வரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிருந்து ஏரளாமானோர் கலந்துகொண்டனர். அப்போது சிலர் மது போதையில் சாலையில் குத்தாட்டம் ஆடி வந்தனர். இந்த சாலை தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் திணறினர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் ஆர்பாட்டத்தின் கூட்டத்திற்கு புகுந்துள்ளார். அப்போது அவர் கையில் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பாமக தொண்டர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் அடித்து மண்டையை உடைத்து கூட்டத்திலிருந்து வெளியே தள்ளி அருகே இருந்த கழிவு நீர் கால்வாயில் தள்ளினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மண்டை உடைந்த இளைஞரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்று மண்டையில் வழிந்தோடிய ரத்தத்தை துடைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் ஆர்பாட்டத்திற்கு பிறகு பாமக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர்.அப்போது பாமக தொண்டர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்த போது காவல்துறையினரிடம் பாமகவினர் வாக்குவாதில் ஈடுப்பட்டு அடாவடி செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக வினர் செய்த ஆர்பாட்டத்தால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 0

0

0