சிவகங்கை ஆவின் தலைவர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

1 September 2020, 11:37 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: சிவகங்கை ஆவின் தலைவர் அசோகன் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” சிவகங்கை மாவட்ட ஆவின் தலைவராக காரைக்குடி கள்ளிவயல் அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார் . அசோகன் எந்த ஒரு பால் உற்பத்தியாளர் சங்கத்திலும் உறுப்பினராக இல்லை . துவக்க பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தால் மட்டுமே , மாவட்ட ஆவினுக்கு தேர்தல் அல்லது நியமனம் மூலம் தலைவராக தகுதியுடையவராகிறார் . அசோகன் எந்த ஒரு எந்த சங்கத்திலும் நிர்வாகக்குழு உறுப்பினராக இல்லை . அசோகன் நியமனத்தில் கூட்டுறவு சங்க சட்டம் , விதிகளை பின்பற்றவில்லை .

அவரது நியமனத்தை ரத்து செய்து , ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி , தலைவரை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்,” இந்த வழக்கு அரசியல் முன்விரோதம் காரணமாக தொடரப்பட்டுள்ளது. தற்போது மனுதாரர் எந்த கூட்டுறவு சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. மேலும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர், உள்நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Views: - 3

0

0