அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

16 September 2020, 7:14 pm
Quick Share

அரியலூர்; தேசிய ஊட்டசத்து மாதத்தினை முன்னிட்டு அமீனாபாத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டம் அமீனாபாத் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் காய்கறி மற்றும் கீரை சாகுபடி செய்யக்கூடிய தோட்டங்களை அமைக்க வேண்டும் என்றும், அதனை முழுமையாக பாதுகாத்து அதிலிருந்து கிடைக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் கீரைகளை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டார்.

பின்னர் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவத் துறையின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறினார். இநிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.