தேசிய புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த கல்வி மாவட்ட அலுவலர்
Author: kavin kumar22 August 2021, 5:58 pm
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேசிய புத்தக கண்காட்சியை திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புதுடெல்லி & தமிழ்நாடு அரசு கிளை நூலகம் சங்கராபுரம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தும் தேசிய புத்தக கண்காட்சியை திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஆரோக்கியசாமி இன்று கலந்துகொண்டு தொடக்கி வைத்தார்.தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த புத்தக ஸ்டால்களை திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில் வருங்கால தலைமுறையினர் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், புத்தகம் மட்டுமே ஒரு வரலாற்றை முழுமையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் என பல்வேறு விஷயங்களை பேசினார். இப்புத்தக கண்காட்சியில் பல்வேறு புத்தக நிறுவனங்கள் சார்பில் பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் போட்டித் தேர்வு புத்தகங்கள், மற்றும் சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புத்தகக்கண்காட்சி தொடர்ந்து 10 தினங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0