பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

5 July 2021, 2:58 pm
Quick Share

திண்டுக்கல்: பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் அனைத்து ஏரிகள் குளங்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் சந்திரா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கஜபதி, மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவக்குமார், பொருளாளர் சங்கர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 89

0

0