வரதட்சணை கேட்டு மிரட்டல்: மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது மனைவி புகார்…

Author: kavin kumar
11 October 2021, 1:53 pm
Quick Share

சென்னை: கொளத்தூரில் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக மருத்துவரான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் மோனிகா. இவர் கடந்த 6 ம் தேதி அன்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த டாக்டர் வினோத் குமாருடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடை பெற்றுள்ளது. ஒரே மகள் என்பதால் மோனிகாவின் பெற்றோர் 100 சவரன் நகை மற்றும் கார் சீர்வரிசையாக தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன் பிறகு மருத்துவர் வினோத் குமாரின் பெற்றோர் மற்றும் பெரியப்பா , மாமா ஆகியோர் திடீரென்று என் அப்பாவுக்கு போன் செய்து 200 சவரன் நகை வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமணம் நடைபெறும்.இல்லையென்றால் திருமணம் நடைபெறாது என பகிரங்கமாக மிரட்டியுள்ளனர்.

பின்னர் 120 சவரன் நகை போடுவதாகவும் மீதி உள்ள 80 சவரன் நகை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பிறகு 2019 ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. அதன் பின் 2 ஆண் குழந்தைகளை பெற்ற பிறகு வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக தன் கணவர் குடும்பத்தார் அனைவரின் மீதும் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் மனைவி மோனிகா. புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் (506) கொலை மிரட்டல் விடுப்பது , (294) ஆபாசமாகப் பேசுவது (498) வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது (324) கத்தி போன்ற ஆயுதங்களால் துன்புறுத்துவது போன்ற பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

Views: - 132

0

0