சுருக்குவலை பயன்பாட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு : 9 கிராமங்களை சேர்ந்த சுருக்குவலை மீனவர்கள் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
19 March 2021, 6:55 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே சுருக்குவலை பயன்பாட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி 9 கிராமங்களை சேர்ந்த சுருக்குவலை மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் கிராமத்தில் சுருக்குலை பன்படுத்தும் மீனவகிராங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நம்பியார் நகர் மீனவ கிராமம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பூம்புகார் பழையார், மடவாமேடு, கொட்டாயமேடு, கூழையார், தர்காஸ், வெள்ளைமணல், மன்மதன் நகர் உள்ளிட்ட மீனவர் கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

மற்ற மாநிலங்களில் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி அளிக்கபடும் நிலையில், தமிழக அரசு மீனவர்களை கலந்தாலோசிக்காமல் தடை விதித்துள்ளதை கண்டித்தும், மறுபரிசீலனை செய்து அனுமதி வழக்க வலியுறுத்தியும், மேற்படி 9 கிராமங்களை சேர்ந்த சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர். இந்த தடையால் பல்லாயிரகணக்கான மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக கூறிய மீனர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தேர்தலை புறக்ணிப்பதாக தெரிவித்தனர்.

Views: - 110

0

0