அரிசிஆலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு: உடலை மீட்டு போலீசார் விசாரணை

Author: kavin kumar
13 August 2021, 1:54 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே தனியார் அரிசிஆலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்ததையடுத்து உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள வடகரை ஊராட்சியில் முத்துப்பாண்டி என்கிற தனியார் அரிசி ஆலையில் விக்னேஷ் என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்குள் உடனடியாக மீட்டதை தொடர்ந்து, செங்குன்றம் காவல்துறையினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விக்னேஷின் உடலை மருத்துவர்கள பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக அளித்த தகவலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு உடலை அனுப்பி வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் அரிசி ஆலையில் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 126

0

0