வேலைவாய்ப்பு அலுவலகம் முற்றுகை: பாஜக இளைஞர் அணியினர்- போலீசார் இடையே தள்ளு முள்ளு

6 November 2020, 3:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரப்பக்கோரி 200க்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் எல்லைபிள்ளை சாவடியில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தை நோக்கி மலர் வளையம் வைக்க ஊர்வலமாக வந்தனர். வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பேரணி வந்த போது போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர் ஆனால் தடுப்புகளை மீறி முற்றுகையிட முன்றவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தனர் இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காவலரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.

முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், புதுச்சேரியில் வேலையின்மை காரணமாக கொலை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தவறான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி என சாமி பெயர் வைத்துக்கொண்டு இந்து கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார் மேலும் வேல் யாத்திரை ஊர்வலத்தால் எந்த மத கலவரமும் நடைபெறாது என்றும், ஓட்டு வங்கி அரசியலை திமுக கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர் என்றார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினின் பினாமி முதலமைச்சராக நாராயணசாமி செயல்படுகிறார்.

Views: - 13

0

0