திமுக சார்பில் எல்லோரும் நம்முடன் புதிய உறுப்பினர் சேர்க்கை

10 November 2020, 5:33 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் திமுகவில் இணைந்த 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் எல்லோரும் நம்முடன் திமுகவில் இணையுங்கள் என புதிய உறுப்பினர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் நகரம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம், திருவாருர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எல்லோரும் நம்முடன் இணைவோம் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் புதிதாக திமுகவில் இணைந்த 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசியதாவது:- மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் கழகத் தலைவர் ஸ்டாலின் சீரிய முயற்சியினால் எல்லோரும் நம்முடன் என்ற நிகழ்வில் அடிப்படியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 25 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்து உள்ள நிலையில், திருவாரூர் நகரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் திமுகவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது நல்ல முயற்சி இணைத்துக்கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் வரும் தேர்தலில் திமுகவுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Views: - 14

0

0