அடையாறு கரையோரம் உள்ள 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

25 November 2020, 8:43 pm
Quick Share

கனமழையால் அடையாற்றில் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் உள்ள செம்பரபாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வடகிழக்குபருவமழை மற்றம் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கூடுவாஞ்சேரி நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர் வெளியேற்றப்பட்டு ஏரியின் முழு கொள்ளளவை ஆழத்தில் இருந்து இரண்டு அடி வரை குறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடையாற்றில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் கலக்கும் போது திருநீர் மலை மேலுள்ள நான்கு அடையாற்றின் கிளை ஆற்றில் இரண்டு அடி மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அதனால் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மழை ஆற்றின் வடகரையில் உள்ள கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதியில் நீர் தேங்க வாய்ப்பு உள்ளது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி , ஊரப்பாக்கம் , மண்ணிவாக்கம் , முடிச்சூர் , பெருங்களத்தூர் , மேற்கு தாம்பரம், திருநீர் மலை , பொழிச்சலூர் , அனகாபுத்தூர் , சென்னை விமான நிலையம் மற்றும் அடையாறு ஆற்றின் வலது கரையில் உள்ள பகுதிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை ஆதனூர் , கரசங்கால் , மணிமங்கலம் , வரதராஜபுரம் , திருமுடிவாக்கம் , எருமையூர் , கேளம்பாக்கம் , நரப்பாக்கம் , மற்றும் அடையாறு ஆற்றின் இடது கரையை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0