6வது நாளாக விவசாயிகளுக்கு பாடை கட்டி உண்ணாவிரதம்: அரை நிர்வாணத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

Author: Udhayakumar Raman
17 October 2021, 6:29 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மத்திய அரசை கண்டித்து 6வது நாளாக பாடை கட்டி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளாக லாபகரமான விலை வழங்காமல் சட்டையை பிடிங்கி கொண்டதால் முதல் நாள் சட்டை இல்லாமலும்,

அரசு வேஷ்டியையும் பிடுங்கி கொண்டதால் இரண்டாவது நாள் விவசாயிகள் கோமணம் கட்டியும் மூன்றாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை அரசு பிச்சை எடுக்க விட்டு விட்டதால் கோவணம் கட்டி கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தும், நாண்காவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதால் விவசாயிகள் மண்டை ஒட்டுடனும், ஐந்தாவது நாள் விவசாயிகளை மத்திய லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டும், இன்று ஆறாவது நாளாக விவசாயிகள் உணவில்லாமல் வயலில் ஓடும் எலியை பிடித்து தின்று இறந்ததால் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டி உண்ணாவிரதம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விவசாயிகள் பாடைகட்டி அரை நிர்வாணத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தினர் இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 117

0

0