நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

9 July 2021, 6:29 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் நள்ளிரவில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக எ.குமாரமங்கலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான இறையூர் எலவனாசூர்கோட்டை குன்னத்தூர் ஆசனூர் வட குரும்பூர் குமாரமங்கலம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் ஏ.குமாரமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்து அங்கு விவசாயிகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது ஏற்கனவே விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Views: - 44

0

0