எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்…

29 August 2020, 4:29 pm
Quick Share

ஈரோடு: விளைநிலங்களின் வழியாக செல்லும் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொடக்குறிச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பணிகள் செய்து வருகின்றது. இதனால் விவசாய நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதால் இதனை எதிர்த்து

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஆவாரங்காட்டு வலசு பகுதியில் உள்ள விவசாயிகள் நிலங்களில் பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் செயலை கண்டித்தும் தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் பதிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறு, குறு பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி மோகன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் குடும்பத்துடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் செல்போனில் பேசி சமாதானம் செய்து கோரிக்கைகளை பரிசீலப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடபட்டது