வெளியானது புதுச்சேரியின் வரைவு வாக்காளர் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

16 November 2020, 7:23 pm
Quick Share

புதுச்சேரி: 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 9,74,754 உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதன் படி 9,74,754 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனையொட்டி இன்று ஒருங்கிணைந்த சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக வரைவு வாக்காளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் துறை வெளியிட்டது.

அதன்படி 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 9,74,754 இதில் ஆண்கள் 4,58,989 பேரும், பெண்கள் 5,15,660 பேர் மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் ஆவார். அதனைத் தொடர்ந்து இன்று முதல் டிசம்பர் 15ம் தேதிவரை உரிமை கோரிக்கையை ஓட்டுச்சாவடி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதவி அதிகாரி அலுவலகங்களில் வழங்கலாம்.

மேலும், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் வரும் 28, 29 தேதிகளிலும், டிசம்பர் 12,13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ம்தேதி வெளியிடப் படுகின்றது. பெயர் சேர்த்தல், ஆட்சேபனைகள், திருத்தங்கள் ஏதாவது இருப்பின் அதற்கான விண்ணப்பங்களை voterportal.eci.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் இலவசம். முதல் முறை வாக்காளர்கள் தாய், தந்தை வாக்காளர் அட்டை நகல்,பிறந்த சான்றிதழ் நகல் அல்லது மாற்றுசான்றிதழ் நகல் கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமை சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வசிப்பவருடைய பெயர் மட்டுமே அந்த பகுதியில் சேர்க்கப்படும்.

Views: - 21

1

0