காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

4 November 2020, 9:06 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் காட்டன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து வந்த நிலையில், ஹோலோ போலீஸ் சேவை வாட்சப் எண்
90033 90050 வந்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவில் தனிப்படை போலீசார் கும்மிடிப்பூண்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மொத்த விற்பனையாளர் ஜெகன், குமார், விஜயகுமார், ஏழுமலை, செல்வி உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 லட்சத்தை 21 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணைக்குப் பின்னர் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் செல்வி மற்றும் விஜயகுமார் இருவரும் மீண்டும் தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டன் லாட்டரி சூதாட்டம் நடைபெற்று வருவதை போலீசார் உரியமுறையில் தடுக்க வேண்டும் எனவும், காட்டன் லாட்டரி சூதாட்டத்தால் ஏராளமான ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 19

0

0

1 thought on “காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

Comments are closed.