இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பு: குற்றவாளியை கைது செய்த போலீசார்

Author: Udayaraman
28 July 2021, 11:53 pm
Quick Share

திண்டுக்கல்: OLX-ல் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்ற நபரை திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் NGO காலனியை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த மாதம் OLX செயலியில் குறைந்த விலையில் யமஹா R15 இருசக்கர வாகனம் விற்பனை செய்யப்படுவதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த வாகன உரிமையாளரின் தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் வாகனத்தின் உரிமையாளர் தான் மதுரையில் இருப்பதாக கூறி வாகனம் வேண்டுமென்றால் முன்பணமாக பணம் ரூ.20,000 /- தனது வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதன் பின்னர் தினேஷ் தனது வாட்ஸ்அப் செயலிக்கு வந்த வங்கி கணக்கில் பணம் ரூ.20,000/- செலுத்தினார். பின்னர் அந்த வாகன உரிமையாளரின் வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளும்பொழுது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தினேஷ் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.குரு வெங்கட்ராஜ் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திருமதி.ரெய்கானா. முதல் நிலை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் காவலர் திரு.விக்னேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் olx- ல் வாகனம் விற்பனை செய்யப்படுவதாக தொடர்பு கொண்ட தொலைபேசி எண்னை வைத்து தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் OLX -ல் வாகனம் விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்ற நபர் சென்னை வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவரென தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் ஆனந்தபாபுவை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றது தான் தான் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஆனந்த பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து பணம் ரூ.20,000/-யை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Views: - 129

0

0