கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டிய பலே ஆசாமிகள் கைது

15 August 2020, 8:27 pm
Quick Share

மதுரை: பாண்டி கோவில் அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாண்டி கோவில் அம்மா திடல் பகுதியில் இருக்கக்கூடிய மரத்தின் நிழலில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சதித் திட்டம் திட்டிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்தில் அமர்ந்திருந்த இளைஞர்களே சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திட்டமிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 0

0

0