தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் கைது

21 January 2021, 3:44 pm
Quick Share

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

மத்திய,மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கோரி புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் இணைக்க வேண்டும், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அரசு ஊழியர்களுக்கு முழுமையாக 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், அரசு துறைகளை மாநில அரசு தனியார் மையமாக்ககூடாது உள்ளிட்ட 12அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக தலைமை செயலகம் நோக்கி வந்தனர். நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் போரணி வந்த போது போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்ற அனைவரையும் கைது செய்தனர்.

Views: - 0

0

0