என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை! கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்.!

13 July 2021, 4:33 pm
Quick Share

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் மற்றும் அந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா உட்பட்ட பச்சூர் ஊராட்சி அருகிலுள்ள மேல் மாமுடிமானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி மகள் சந்திரா . இவருக்கு வயது 25. இதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரது மகன் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிய நிலையில், குழந்தை பாக்கியம் இல்லாத காரணங்களாலும் அவ்வபோது வயிற்றுவலி காரணமாகவும், தனியார் மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளனர்.

சந்திராவின் தாயார் லட்சமி அடுத்த நாள் காலை அவருடைய அறையை பார்த்துள்ளார். சந்திரா தூக்கு மாட்டி இறந்ததை அறிந்த லட்சுமி நாட்றம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 406

0

0