வஉசியின் வழியிலேயே அவருடைய அடையாளங்கள் போற்றப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி…

Author: Udhayakumar Raman
5 September 2021, 12:26 pm
Quick Share

தூத்துக்குடி: வஉசியின் வழியிலேயே அவருடைய அடையாளங்கள் போற்றப்பட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்  உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசுகையில், தன் வாழ்நாளில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி தமிழ் மொழிக்காக தமிழ் மொழியின் அடையாளத்திற்காக பாடுபட்ட வ.உ.சி சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தொடர்ந்து இந்திய மக்களுக்காக போராடிய பெரும் தலைவரான அவருடைய நினைவுகள் போற்றப்பட வேண்டும். அவர் வழியில் இந்த நாட்டின் அடையாளங்களை தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்போம் என்று கூறினார்.

Views: - 75

0

0