வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம் தொடக்கம்

14 August 2020, 8:42 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாத்து விவசாயத்தினை பேணிகாத்திட அரசன் ,புங்கன் ,கொய்யா, பூவரசமரம் , வேப்பன் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை சேகரித்து கிரிசமுத்திரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மற்றும் சாலையோரம், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.

பின்னர் பேசிய அவர் மாவட்டத்தில் மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையினை கருத்தில் கொண்டு மரம் நடுவதில் ஆர்வம் கொண்டுள்ள இப்பகுதி முன்னாள் மாணவர்களை போல இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனவும் மாவட்டத்தினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் சாலைகளில் வேகத்தடை போன்று கொரோனா தொற்று நோய் தடையாக இருப்பதால் அதனையும் தாண்டி நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதேபோல் ஆலங்காயம் பகுதியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் நடப்பட்டன.

Views: - 8

0

0