கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- போலீஸ் விசாரணை

26 January 2021, 3:50 pm
Quick Share

வேலூர்: காட்பாடி ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் உடல் ரயில் அடிப்பட்டு பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகில் பழைய காட்பாடியில் ரயில் தண்டவாளத்தில் சென்னையிலிருந்து திருவேந்திரம் செல்லும் ரயிலில் அடிப்பட்டு ஒரு இஸ்லாமிய பெண் சுமார் 27 மதிக்கதக்கவரும் மற்றும் ஒரு ஆண் 30 வயது மதிக்கதக்கவரும் ஆகிய இருவரும் இறந்த நிலையில், உடலை காட்பாடி ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்த இருவரும் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் இவர்கள் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அபிபூர் ரகுமான், இவர் திருமணமாகாதவர், ஷபானயாஸ்மீன் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானவர்கள் இவர்கள் இருவருக்கு கள்ளக்காதல் என கூறப்படுகிறது. இவர்கள் இங்கு வந்த தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Views: - 5

0

0