சுயேட்சை எம்.எல்.ஏ.விடம் ரூ. 15 லட்சம் மோசடி: புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் கைது

Author: Udhayakumar Raman
6 September 2021, 2:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சுயேட்சை எம்.எல்.ஏ.விடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மாநிலம், திருபுவனை (தனி) தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன். இவர் கடந்த ஜனவரி 2ம் தேதி புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்த புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ரவி (எ) புரட்சி ரவியிடம் பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ. 15 லட்சம் கொடுத்துள்ளார். இந்த பணத்தில் திருச்சி நெடுஞ்சாலை, பரிக்கலில் உள்ள நிலம், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள இடத்தை வாங்க, ஒப்பந்த பத்திரம் தயாரித்து, அங்காளனிடம் கையெழுத்து வாங்கி சென்றுள்ளார்.

ஆனால், நில உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கி ஒப்பந்த பத்திரம் வழங்கப்படவில்லை. பல முறை ஒப்பந்த பத்திரம் கேட்டும் ரவி வழங்காததால், அங்காளன் எம்.எல்.ஏ., கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புரட்சி பாரதம் கட்சி மாநில தலைவர் ரவி மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில்,நேற்று புதுச்சேரி கோவிந்தசாலையில் இருந்த ரவியை பெரியக்கடை போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி முன்பு ரவியை ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 259

0

0