சுதந்திர தின விழாவில் படுகரின பாரம்பரிய நடனமாடிய இன்ன சென்ட் திவ்யா

Author: kavin kumar
15 August 2021, 3:56 pm
Quick Share

நீலகிரி: உதகையில் நடைபெற்ற 75 – வது சுதந்திர தின விழாவில் படுகரின பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, உதகை சார் ஆட்சியர் மோனிகா ரான, குன்னூர் சார் ஆட்சியர் செல்வி தீ பனா விஷ்வேஸ்வரி ஆகியோர் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 75 – வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையில் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீலகிரியில் வாழும் மண்ணின் மைந்தர்களான தோடர், கோத்தர், படுகரின பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது படுகரின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்ற போது மலைவாழ் பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, உதகை சார் ஆட்சியர் மோனிகா ரான, குன்னூர் சார் ஆட்சியர் செல்வி தீ பனா விஷ்வேஸ்வரி ஆகியோர் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் காவலர்கள் என அனைத்து தரப்பினரும் மைதானத்தில் நடனமாடியது சுதந்திர தின விழா உற்சாகமாக முடிந்தது.

Views: - 151

0

0