நண்பர்களுடன் மது அருந்தச்சென்றவர் ஏரியில் சடலமாக மிதந்த பரிதாபம்….
Author: kavin kumar29 September 2021, 1:57 pm
வேலூர்: காட்பாடி அருகே நண்பர்களுடன் மது அருந்தச்சென்றவர் ஏரியில் சடலமாக மிதந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்னறனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் இன்று மீன்பிடிக்க சென்றுவர்கள் சடலமொன்று மிதப்பதை கண்டு விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விருதம்பட்டு போலீசாரும் காட்பாடி தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். காளியம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்த அக்பர் வயது (21) இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என்று உறவினர்கள் கழிஞ்சூர் பகுதியில் தேடிக்கொண்டிருந்த்துள்ளனர்.. இந்நிலையில் போலீஸ் தீயணைப்பு துறையினர் கழிஞ்சூர் ஏரியில் பிணம் ஒரு மித்தப்பதையும் அவரகள் அதை மீட்பதையும் பார்த்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த உடலை அடையாளம் கண்டு இவர்கள் தேடிக்கொண்டிருந்த அக்பர் என தெரியவந்தது. அக்பருடைய உறவினர் மற்றும் அவருடைய அண்ணன் கூறும்பொழுது நண்பர்களுடன் மது அருந்த சென்றதாகவும், அப்பொழுது நண்பருக்கும் இடையே சண்டை வந்திருக்கலாம் என்றும், அப்போது இவரை அவர்கள்தான் தண்ணீரில் தள்ளி இருக்கலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.அக்பர் பிளாஸ்டிக் குடம் செய்யும் தொழில் செய்பவர்.விருதம்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0