மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி நகைகள் பறிப்பு: போலீசார் விசாரணை…!

13 July 2021, 2:31 pm
Quick Share

சென்னை: சென்னையில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 14 சவரன் நகைகளை பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரில் வசித்து வருபவர் சாரதா. இவருடைய கணவர் கோபாலகிருஷ்ணன் திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சாரதா தனது மகன் சித்திர பிரசாத் வயது 45 வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டி சாரதா சீனிவாச நகரில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு வழக்கம் போல் மாக்காராம் தோட்டம் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இருவர் வழிமறித்து ,பக்கத்து தெருவில் பிரச்சனை கூட்டமாக இருக்கிறது.

நீங்கள் அந்த வழியாக நகைகளை அணிந்து சென்றால் நகைகளை பறித்துச் சென்று விடுவார்கள். ஆகவே எங்களிடம் கொடுங்கள் அதை பத்திரமாக உங்கள் பர்சில் வைத்து தருகிறோம் என்று கூறி, சாரதா கையில் அணிந்திருந்த 6 வளையல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் ஆக மொத்தம் 14 சவரன் நகைகளை மூதாட்டியின் கவனத்தைத் திசை திருப்பி பறித்து சென்று விட்டனர். இதுபற்றி மூதாட்டி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 115

0

0