இருசக்கர வாகனத்தின் மீது மோதிய மணல் லாரி… தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்….

27 August 2020, 2:46 pm
Quick Share

காஞ்சிபுரம்: இளையனார்வேலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் இளையனார்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவர் தனது மனைவியுடன் நாள்தோறும் கூலி வேலைக்கு அருகில் உள்ள வாலாஜாபாத் நகரத்திற்கு செல்வது வழக்கம். தொடர் பணி காரணமாக நேற்று இருவரும் வேலை செய்யும் இடத்திலேயே பெற்றோர்கள் தங்கியதால் அவர்களுக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை எடுத்துக் கொண்டு அவரது மகன் தினேஷ் (11ஆம் வகுப்பு படிக்கின்றார்) மற்றும் விக்னேஷ் ( பத்தாம் வகுப்பு பள்ளியில் சேர உள்ளார்) வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இளையனார் வேலூர் பகுதியில் மாகரல் நோக்கி வந்து கொண்டிருந்த கல்குவாரி கனரக லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே தினைஷ் தலை நசுங்கி உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் பல கிராமங்கள் வழியாக செல்கின்றது. அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதால் இந்த கல்குவாரி தொழிற்சாலையை மூட வேண்டுமென மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. கல்குவாரி வாகனங்களை தடை செய்யவும் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.