மரவாபாளையத்தில் ஊராட்சி மன்ற கூட்டம்: தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக வார்டு உறுப்பினர்கள் குற்றசாட்டு: கூட்டத்தை விட்டு பாதியில் வெளிநடப்பு

Author: Udhayakumar Raman
23 July 2021, 6:57 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள மரவாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றசாட்டி ஊராட்சிமன்ற கூட்டத்தில் இருந்து 9 வார்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மரவாபாளையம் ஊராட்சியில் திட்டுப்பாறை, தாமரைக்காட்டுவலசு, திட்டம்பாளையம். செம்மங்குலி பாளையம். பாரவலசு, காமாட்சிபுரம், அண்ணா நகர், முசுகுட்டிவாலசு ஆகிய ஊர்களை உள்ளடக்கியது . இங்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கீதமணி சிவகுமார் என்பவர் தலைவராக உள்ளார் .மேலும் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 அதிமுக கட்சியினரும், 2 திமுகவினரும் 1 சுயேட்சை உறுப்பினரும் உள்ளனர்.சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதமணி சிவகுமார் பின்னாளில் திமுகவில் இணைந்தார்.

தற்போது எந்த ஒரு ஊராட்சி மன்ற கூட்டங்களையும் நடத்துவதில்லை என வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர் . மேலும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 2 தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டவேளையில் 3 ஒரு தீர்மானத்தை இவரே யாரிடமும் கூறாமல் நிறைவேற்றி விட்டதாக வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் வட்டாரவளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். மேலும் இன்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது இதுகுறித்து கீதமணி சிவகுமாரிடம் 9 வார்டு உறுப்பினர்களும் கேள்வியெழுப்பினார்.

மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை, புதியதாக தொழில் துவங்குவபவர்களுக்கு பலமாதங்களுக்கு முன்பே செயல்படுவது போல் கட்டிட அனுமதி கொடுத்துவிட்டு இன்று தீர்மானத்தில் கையெழுத்து கேட்பது எனவும் செம்மங்குலிபாளையத்தில் மின்சாரம் தயாரிக்கும் பெரிய தனியார் நிறுவனத்திற்கு 4 மாதத்திற்கு முன்பே அனுமதி வழங்கிவிட்டு இதுவரை தீர்மானம் நிறைவேற்றவில்லை என்கின்றனர்.தலைவருக்கு உறுதுணையாக ஊராட்சி செயலாளர் வடிவேலு மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவிக்கின்றனர்.

Views: - 320

0

0