தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம்…
16 August 2020, 1:48 pmகன்னியாகுமரி: திங்கள்நகரில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவில் ரத்தம் தானம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இரத்த தான முகாம் நடத்தபட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோயயாளிகளுகாக சிறப்பு ரத்த தான முகாம் நடத்தபட்டது. திங்கள் நகரில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் கொரோனா நோயாளிகளுக்கு உதவுததற்காக ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தனர்.
12 ஆண்டாக நடத்தப்படும் இந்த ரத்ததான முகாம் போன்று கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் நூறு இடங்களில் இது போன்று முகாம்கள் நடைபெற்றதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தின் குமரி மாவட்ட செயலாளர் நபீல் அஹ்மத் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த முகாமில் மாவட்ட தலைவர் ஷேக் அலி, கிளை தலைவர் ஜாகிர் உசேன், கிளை செயலாளர் நிவாஸ், கிளை பொருளாளர் அப்சல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
0