2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்… அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர்கள்…

17 August 2020, 4:50 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சமூக விலகலை கடைபிடித்தும் முகக்கவசங்களை அணிந்தும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

தமிழகம் முழுவதும் 2020-2021 ம் ஆண்டிற்கான கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்று காரணமாக, அனைத்துப்பள்ளிகளிலும் மூடப்பட்டு, வரும் நவம்பர் மாதம் வரை பள்ளிகள் விடுமுறை என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12 ஆகிய வகுப்புகள் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஒரு சில வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையானது இந்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையானது இன்று முதல் தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கரூர் அடுத்த காந்திகிராமம் காலனி பகுதியில் உள்ள தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 ம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளிகளை கடைபிடித்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.

Views: - 29

0

0