331 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கே.பி.அன்பழகன்

6 August 2020, 11:04 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 44 லட்சம் மதிப்பில் 331 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 5 கோடியே 44 லட்சம் மதிப்பில் 331 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தலைமையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி கிராமத்தில் வசிக்கும் இருளர் இனமக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தகுதியானவர்களை தேர்வு செய்து தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களை சென்றடைய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதி உடையவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு, அப்போது 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதும் மேலும் 10 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பழுதடைந்த வீடுகளை சரி செய்வதற்கு ரூபாய் ஐம்பதாயிரம் வரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு 2097 பேருக்கு 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காரிமங்கலம் பகுதியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் காரிமங்கலம் பேரூராட்சி சார்பில் 331 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 44 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் பேசினார்.

Views: - 4

0

0