பிரபல வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை…

5 August 2020, 10:38 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரபல வழக்கறிஞர் சுகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ள மா பொ சி தெருவில் வசித்து வந்த பிரபல வழக்கறிஞர் சுகுமார். இவர் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்குகளை எடுத்து நடத்தி வந்தவர் .
மேலும் மீனாட்சி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் அறையின் உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை திறந்து பார்த்ததில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உட்புறமாக பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கறிஞர் சுகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.