சிறுத்தை நடமாட்டம்: மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

Author: Udhayakumar Raman
30 November 2021, 12:10 am
Quick Share

கோவை: கோவையில் அடுத்தடுத்து குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் பகுதி சுற்றி உள்ள மலைப்பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு தன்னாசி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக வந்த ஒருவர் கோவில் கேட்டில் மேல் சிறுத்தை படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக வனதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் சிறுத்தை நடந்து சென்ற கால் தடத்தையும் உறுதி செய்தனர். பின்னர் அந்த இடத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டும் என்று கூறி கோவில் கேட்டை பூட்டி சென்றனர். இந்நிலையில் மீண்டும் இன்று கோவைப்புதூர் பகுதிக்குள் சிறுத்தைய கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையோ பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 85

0

0