கொடைக்கானலில் விவசாயிகளை அச்சுறுத்தும் ஒற்றைக் காட்டு யானை : விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம்!!
Author: kavin kumar26 August 2021, 7:29 pm
திண்டுக்கல் : கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டுயானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து வன விலங்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் தொடர்ந்த காட்டுயானை அட்டகாசம் தற்போது மேல்மலை பகுதியான பூம்பாறை மற்றும் கூக்கால் பகுதியில் துவங்கி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டுயானை விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர் .எனவே மேல்மலை பகுதியில் காட்டுயானையை கண்காணிக்க கூடுதல் வனக்காவலர்களை நியமிக்க வேண்டுமெனவும் , வனப்பகுதிக்குள் காட்டுயானையை விரட்ட வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ..
0
0